சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம் மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திக் முன்னிலை வகித்தார். சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை, வியாபார சான்றிதழ் வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சாலையோர விற்பனையாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் வரதராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story