சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாரி, செயல் தலைவர் சங்கர், மற்றும் தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் எடுக்க கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்த விடாமல் தொடர்ந்து தேர்வுகள் நடத்துவதை நிறுத்த வேண்டும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, பள்ளி கல்வித்துறை ஆணையரின் உத்தரவை மீறி செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்தும் ேகாஷங்களை எழுப்பினர்.