மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சண்முகம், பாலகிருஷ்ணன், முருகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ரேஷன் கடைகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.