சேலத்தில் அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூக மக்களுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சீமானை கைது செய்யக்கோரியும், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வக்கீல் பிரதாபன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் அருந்ததியர் மக்கள் இயக்க துணை பொதுச்செயலாளர் ராமசாமி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, வக்கீல்கள் முகிலன், நரேஷ்குமார், சதீஸ், தூயவன், நிர்வாகிகள் அறிவழகன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story