மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், நாராயணமூர்த்தி, ரேகா, முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் சேதுமாதவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கல்வி மற்றும் பொது சுகாதாரத்தின் நிதியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.