மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்-காதில் பூ வைத்த படி கோஷம் எழுப்பினர்
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காதில் பூ வைத்த படி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
ஏழை, எளிய மக்களுக்கு பயன் இல்லாத பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளதாக கூறி அதை கண்டித்தும், மறைமுக வரியை குறைக்க வேண்டும், உணவு பொருட்கள் மற்றும் உரம், பெட்ரோல் ஆகியவற்றுக்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காதில் பூ வைத்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதற்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகராஜா முன்னிலை வகித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Next Story