சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநில செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, வேளாண்மை பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோல் தொழிற்சாலை

மேட்டூர் அணை உபரிநீரை சேலம் மாவட்டத்தில் விடுபட்ட வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். விளைபொருட்களுக்கு உண்டான உற்பத்தி செலவை கணக்கீடு செய்து, விலை நிர்ணயம் செய்ய உத்தரவாத சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாய உற்பத்தியை பெருக்க, விவசாயிகளுக்கு, விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவை இலவசமாக வழங்க வேண்டும்.

கூட்டுறவு துறை மூலம் மரவள்ளி கிழங்கிற்கு என்று ஜவ்வரிசி ஆலை அமைக்க வேண்டும். தலைவாசல் கால்நடை பூங்காவில் தோல் தொழிற்சாலை நிறுவ அனுமதி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story