கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்,

வாழப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் விஜயராஜ், செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் மணி தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் வட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story