ஆணவ கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஆணவ கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் ஆணவ கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் பன்னியாண்டிகள் நலச்சங்கம் சார்பில் காதல் திருமணம் செய்த ஜெகன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இருதயராஜ், ரவி, நாராயணமூர்த்தி, மாவட்ட செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லிபாபு, மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார். காதல் திருமணத்தை சகிக்காத பெண்ணின் தந்தை உறவினர்களுடன் சேர்ந்து மனிதநேயமற்ற வகையில் ஜெகனை நடுரோட்டில் ஆணவ படுகொலை செய்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பணியும், ஜெகன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்குவதுடன், சாதி, மதம், இன வெறியுடன் இதுபோன்று நடைபெறும் ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story