விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஓசூர் வ.உ.சி.நகர் அருகில் முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதிக்கு, தந்தை பெரியார் சதுக்கம் என்று பெயரிட்ட தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்தும் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முரசு நன்னன், முத்துகுமார், துணை செயலாளர்கள் மாரப்பா, ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் முனிராஜ் வரவேற்றார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன், மண்டல செயலாளர் நந்தன், மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம், நவ்ஷாத், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவி ஷாநவாஸ், மாவட்ட தி.க.தலைவர் வனவேந்தன் உள்பட பலர் பேசினர். மேலும் இதில் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், நகர தொண்டரணி அமைப்பாளர் சூரிய வளவன் நன்றி கூறினார்.


Next Story