தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கோபி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சாதிக் உசேன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ், மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஓய்வு பிரிவின் மாவட்ட தலைவர் ரங்கப்பன், செயலாளர் ஜெய ஆரோக்கியசாமி, பொருளாளர் திம்மராயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் மரிய சாந்தி, பிரியதர்ஷினி, நளினி பிரியா, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், சுதாகர் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.