காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
x

இரும்பாலையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், வீரபாண்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் இரும்பாலை மெயின் கேட் அருகில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வட்டார தலைவர்கள் ஆர்.கே.செட்டியார் (வீரபாண்டி வடக்கு), சாமி (வீரபாண்டி தெற்கு), செல்வகுமார் (சேலம்), நரசிங்கபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சக்கரவர்த்தி, அமைப்புசாரா காங்கிரஸ் நிர்வாகி ஜே.பி.கிருஷ்ணா, மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் கிராம கமிட்டி தலைவர் வண்டி ராஜு, சேவாதளம் மாநில செயலாளர் காமராஜ், இரும்பாலை என்.டி.யு.சி. தலைவர் ராமலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவி பிரீத்தா, மாவட்ட செயலாளர் சேட்டு, தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் விஜயா மணிமாறன், அங்குசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குணாவதி குணசேகரன், ராஜா சாமியப்பன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story