கிருஷ்ணகிரியில் கூட்டுறவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, செங்கல்பட்டு துணைப்பதிவாளர் உமாதேவியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், அரசு ஊழியர் சங்க மகளிர் அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டுறவு சங்க இணை செயலாளர் பானுமதி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தரக்குறைவாகவும், கண்ணியமற்ற முறையில் பேசியும், மாதாந்திர ஊதியப்பட்டியலில் கையொப்பமிடாமலும் மற்றும் துறை உயர் அதிகாரிகளையும் இழிவாக பேசும் துணைப்பதிவாளரை (வீட்டு வசதி) பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.