சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில் நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மணிசெல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை அமைப்பாளர்கள் சந்திரா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி தொடங்கி வைத்தார். இதில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் திருவேரங்கன், சத்துணவு ஊழியர் சங்க செயாளர் சுரேஷ், முன்னாள் தலைவர் தங்கவேலன் மற்றும் நிர்வாகி அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story