பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மாநில நிர்வாகி கொலையை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா பட்டியல் அணியின் மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பா.ஜ.க. நிர்வாகி சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story