ஆர்ப்பாட்டம்
மானூரில் தமிழர் விடுதலைக்களத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானூர்:
மானூர் அரசு கலைக் கல்லூரிக்கு மதவக்குறிச்சி பஞ்சாயத்து பகுதியில் நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு கட்டுமான பணிகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை மீண்டும் தொடங்கி கட்டிட பணியை முடிக்க வலியுறுத்தி தமிழ்நாடு தமிழர் விடுதலைக்களம், கட்டுமான பணி பாதுகாப்பு குழு மற்றும் ரஸ்தா வர்த்தகர் பேரவை சார்பில் நேற்று மானூரில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தமிழர் விடுதலைக்களத்தின் நிறுவன தலைவர் ராஜ்குமார், துணைத்தலைவர் சாமி மற்றும் தொண்டர்கள், கட்டுமான பணி பாதுகாப்பு குழு சார்பில் மதவக்குறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் பேராட்சியம்மாள், முருகேசன், ஆறுமுகம், ரஸ்தா வர்த்தகர் பேரவை சார்பில் மாயகிருஷ்ணன், சீவலப்பேரியான், ராமகிருஷ்ணன், யாக்கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.