ஆர்ப்பாட்டம்
பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி
கடையம்:
கடையம் யூனியன் பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வார்டு உறுப்பினர் அரவிந்தராஜன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முகமது அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். பொட்டல்புதூர் பஞ்சாயத்தில் குடிநீர், தெருவிளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், பொட்டல்புதூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் முகமது மைதீன் என்ற ஏஒன்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் ஷேக் உதுமான், ஒன்றிய விவசாய சங்க துணை தலைவர் கிறிஸ்டோபர், வார்டு உறுப்பினர்கள் ஹமிதா பானு, மைதீன் பாத்திமா, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர் பழக்கடை மைதீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story