கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராதா, காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனார். மாவட்ட இணைச்செயலாளர் சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், சரவணன், மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மாநில பொருளாளர் நந்தகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில துணைத்தலைவர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்-அமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.