கோவில்பட்டியில் பா.ஜ.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் பா.ஜ.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் போலீசாரை தாக்கிய பா.ஜ.க.வினரை கண்டித்து பாண்டியனார் மக்கள் இயக்கத்தினர் பயணிகள் விடுதி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க தலைவர் சீனிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், இயக்க நிர்வாகிகள் காளிராஜ், சேர்ம ராஜ், முருகன், மதன், ஜார்ஜ், விண்ணரசு ஆகியோர் பேசினர்.


Next Story