தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தே.மு.தி.க. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் புருஷோத்தமன் (மாநகர்), பிரதாப் (புறநகர்) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அவைத்தலைவர்கள் ஜெகதீசன், பாலமுருகன், பொருளாளர்கள் சுரேஷ், பொன்.தனசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. தொண்டரணி செயலாளர் கணேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். வேலூர் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story