மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் ஷாபுதின், மாவட்ட இணை செயலாளர் கீதாசுந்தர், மாவட்ட துணை செயலாளர் ரமாபிரபா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது,
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, நெசவு நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து பதாகைகளை ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.கோ.அண்ணாமலை, வி.கே.ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், தினகரன், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வாலாஜா நகர செயலாளர் மோகன் நன்றி கூறினார்.