அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் டி.டி. குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், இணைச் செயலாளர் டி.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமை தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது தமிழக அரசின் கடுமையான மின் கட்டண உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இதே மின் கட்டண உயர்வுக்கு தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருப்பு சட்டை அணிந்து கொரோனாவை விட கொடியது என பேசினார். தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை திரும்பப் பெறக்கோரியும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தாதே, உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகர துணை செயலாளர் ஆனந்தன், டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என்.திருப்பதி செல்வம், ஆனந்த பிரபு, நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ். சதீஷ் உள்பட நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.


Next Story