உரத்தட்டுப்பாட்டை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
உரத்தட்டுப்பாட்டை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீனி கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் திருஞானம், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து இரவிலும் மருத்துவமனையை செயல்படுத்த வேண்டும். கறம்பக்குடி பகுதியில் நிலவும் யூரியா உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கறம்பக்குடி நீதிமன்றத்தை உடனே திறக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story