மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி தலைமை தாங்கி பேசினார். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமற்ற நிவாரணம் வழங்கிட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு திரும்ப பாதுகாப்பு அளிக்க வேண்டும். மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று மாநில முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சுதா, குளோரி, ராணி, சாரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.