தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காத  கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி உரிமை மீட்புக்குழு

காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு, காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் மணிமொழியன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹூமாயூன்கபீர், மணிசெந்தில், தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், தமிழ்தேசிய முன்னேற்ற கழக தலைவர் கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் அகமதுகபீர், காவிரி உரிமை மீட்புக்குழு துரை.ரமேஷ், தமிழர் தேசிய களம் தலைவர் கலைச்செல்வன், ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பதவி நீக்கம்

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசும், நடுநிலை தவறிய காவிரி மேம்பாட்டு ஆணையமும், செயல்படாத ஆணையத்தின் தலைவர் ஹல்தாரை கண்டிப்பதுடன், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக புதிய ஆணையம் அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டிப்பதுடன், கர்நாடக அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர், தமிழ் தேசிய பேரியக்கத்தினர், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியினர், வளரும் தமிழகம் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.


Next Story