ஊரக வளர்ச்சி துறையினர் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறையினர் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை சங்கம் சார்பில் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பணிகளை வரைமுறை படுத்த வேண்டும், கம்ப்யூட்டர் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விஜயா நன்றி கூறினார். இதேபோல் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஊரக வளர்ச்சித்துறை ஓட்டுனர் சங்க தலைவர் அன்பு, வட்டார தலைவர் ரஜினி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் கலையழகன் நன்றி கூறினார்.