கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கூட்டமைப்புச் செயலாளர் வக்கீல் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் செல்லத்துரை, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் வக்கீல் ரவிக்குமார், நிர்வாகிகள் நாஞ்சில்குமார், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், பகத்சிங் ரத்ததான கழகத் தலைவர் காளிதாஸ், கருப்பசாமி, கலைச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், "கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடை கடைகள் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் சார்பாக நடத்திய போராட்டத்தின் காரணமாக, மெயின் ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு ஓடையை விரிவுபடுத்தி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையொட்டி ஓடையின் கீழ்புறம் நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்கள். நீர்வரத்து ஓடை அளவை குறைத்து குறுகலாக தடுப்புச்சுவர் கட்டப்படுவதாகவும், நீர்வரத்து ஓடை அகலத்தை அளந்து தடுப்புச்சுவர் கட்டும் பணியை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலந்து முறைப்படி நீர்வரத்து ஓடையை அளந்து, தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடரும் என்றார்.


Next Story