ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 2 பேரை சாதி பெயரை சொல்லி அடித்து அவமானப்படுத்தியதாக தங்கமணி, பூபாலன், சேகர் ஆகியோர் மீது எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் இதுவரை இவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், சரவணகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நிறுவன தலைவர் அதியமான் கலந்து கொண்டு பேசினார். மேலும் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன், மாவட்ட தலைவர்கள் சிவசங்கர், சங்கர், சுமன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story