ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார்.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சிலை மலைப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு மயான பாதை கேட்டு போராடிய ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்ததை கண்டித்தும்.

திருவள்ளூர் மாவட்டம் நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கழித்த சாதி வெறியர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தென் மண்டல செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story