சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
பெத்தநாயக்கன்பாளையம்
ஆத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே சொத்துவரி, மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்பரசு, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வம் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், கூட்டுறவு வங்கி தலைவர் லோகமுருகன், அ.தி.மு.க. நகர பொருளாளர் சக்தி கோபால், நகர துணை செயலாளர் சந்திரசேகர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜமுத்து எம்.எல்.ஏ.
வீரபாண்டி கிழக்கு ஒன்றியம், இளம்பிள்ளை பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வீரபாண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் துளசிராஜன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கே.எஸ். கோவிந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றி குழு தலைவர் எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் மல்லிகா, கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அழகு சபாபதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடாசலம், பாசறை செயலாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் ரத்தினம், சாந்தி, சுரேஷ்குமார், கருப்பூர் கிளை செயலாளர்கள் பரமசிவம், கந்தசாமி, மகேந்திரன், இளங்கோ வெங்கடாசலம், மகளிர் அணி செயலாளர் கனகாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
ஆட்டையாம்பட்டி
ஆட்டையாம்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேரூர் செயலாளர் மாதேஸ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ், பேச்சாளர் விஜயாதைலான் ஆகியோர் பேசினர். பாப்பாரப்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு சாரா சங்க முன்னாள் துணைத் தலைவர் சோமு தியாகராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கவேல், பேரூர் மகளிர் அணி செயலாளர் கன்னிகா, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் முருகேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அப்புச்சி மோகன்ராஜ், கூட்டுறவு சங்க தலைவர் மனோகரன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மல்லூர் நகர அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கண்மணி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகர அவை தலைவர் துர்கா தங்கவேல், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பரமசிவம், நகர துணைச் செயலாளர் பாலு, மல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலாஜி, கவிப்பிரியா, தினேஷ், தேவி, ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.