அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வந்த மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட துணைத்தலைவர் வெண்மணி, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட பொருளாளர் சண்முகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.