ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த கூடாது. தமிழகம் முழுவதும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை குறைத்திட வேண்டும். ஸ்பாட் பைன் முறையை கைவிட வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்க மாவட்ட செயலாளர் அனிபா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சங்க மாவட்ட பொருளாளர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.