மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி, தற்போது நஷ்டம் ஏற்பட்டதாக கூறி மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதனை சரி செய்தாலே தமிழ்நாடு மின்மிகு மாநிலமாக விளங்கும். எனவே, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story