போதைப் பொருட்களை ஒழிக்கக் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


போதைப் பொருட்களை ஒழிக்கக் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் போதைப் பொருட்களை ஒழிக்கக் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட பா.ம.க. சார்பில் போதை பொருட்களை ஒழிக்கக்கோரி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.சிவா தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் பாலு வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.கிருபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம். எல்.ஏ. டி.கே.ராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எதிர்கால இளைஞர்களின் நலன் கருதி தமிழக அரசு போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், போதை பொருள் வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஜி.பொன்னுசாமி, நிர்மலா, குட்டிமணி, மாவட்டத் தலைவர் கணபதி, பாச்சல் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, திருப்பதி, நகர செயலாளர் கராத்தே சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் டி.கேஆர்.முத்தமிழ் நன்றி கூறினார்.


Next Story