தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி
தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். இதில், ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story