கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமையிலும், சங்கத்தலைவர் சங்கரநாராயணன், கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். பணிபுரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மாற்று ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள பணிநிலை திறன் திருத்தி அமைக்கப்பட வேண்டும். கூட்டுறவுவங்கியில் தேவையான அமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகள் கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்பத்தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தவும், ஆகஸ்ட் 12-ந் தேதி கூட்டுறவு வங்கி ஊழியர்கள ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.



Next Story