காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்தும், டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த போலீசாரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார்.
இதில் மேலப்பாளையம் மண்டல தலைவர் ரசூல் மைதீன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்குள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளியூர் யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் தலைமை தாங்கினார். வள்ளியூர் நகர தலைவர் அல்போன்ஸ் ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.