காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை டவுனில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் வாகையடிமுனையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்க துறை பொய் வழக்குப் போடுவதை கண்டித்தும், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசாரை கண்டித்தும், சந்திப்பு பஸ் நிலையத்தில் மணல் திருட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார்.
இதில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ளைபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story