கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்


நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துராஜா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் செங்கல்பட்டு மாவட்ட துணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களையும், உயர் அதிகாரிகளையும் தரை குறைவாக பேசுவது, மாத ஊதிய பட்டியலில் கையெழுத்திடாமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக, துணைப்பதிவாளர் உமாதேவியை பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story