அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு:ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு:ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சூரமங்கலம்:

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்யக்கோரியும் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வெங்கடேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட பொருளாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story