மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தோவாளை வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் உள்பட பலர் சிறப்புரையாற்றினா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமல்படுத்தி உள்ள அரசாணை எண் 52-யை அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற வேலை அட்டை வழங்க வேண்டும்.மேலும், 4 மணி நேர வேலையை முழு ஊதியத்துடன் வழங்க வேண்டும். மாதம் ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை தோறும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகள் தனித்தனியாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேலை கேட்டு மனு கொடுத்தனர்.