தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு மத்திய அரசையும், மின்சார கட்டண உயர்வுக்கு மாநில அரசையும் கண்டித்து புதுக்கோட்டையில் தே.மு.தி.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் மன்மதன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கயற்கன்னி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story