பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
நெல்லை:
பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் பீர்முகமதுஷா தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மின்சார வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும். 3 சதவீத பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாலமோன், தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன தலைவர் கண்ணன், மாநில உப தலைவர் செல்லத்துரை, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் வண்ணமுத்து, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மண்டல செயலாளர் மாதவன், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ராயன், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் கருப்பசாமி, தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் முருகன், தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர் யூனியன் திட்டத் தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.