குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாயிகள் குடுகுடுப்பைகாரர் போன்று வேடம் அணிந்து குறி சொல்லி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கி குடுகுடுப்பைகாரர் வேடம் அணிந்து வந்திருந்தார்.

அப்போது அவர்கள் மாவட்ட வேளாண்மை துறையை கண்டித்தும், மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது.

வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குடுகுடுப்பை ஆட்டி ஜக்கம்மா செல்றா, ஜக்கம்மா சொல்றா என்று நூதன முறையில் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் வேளாண்மை, வருவாய், வனம், கல்வி, கால்நடை, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் ஊராட்சி மன்ற கட்டுப்பாட்டில் கடந்த 1982-ல் செயல்பட்டது போன்று தற்போது செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Next Story