சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விராலிமலை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், இளஞ்சியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சோலைமலையான் நன்றி கூறினார்.
இதேேபால் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.