சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட முடிவின்படி காலை உணவினை அனைத்து பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டியும், இத்திட்டத்தினை தமிழக அரசு ஏற்று சத்துணவு மையங்களில் சமைத்து வழங்க ஆவன செய்யுமாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத்தலைவர் டி.பூபதி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் மா.அன்பழகன் பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆர் ஞானமுத்து நன்றி கூறினார்.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story