தூத்துக்குடியில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவர் மயில் வாகனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சமஸ்தானம், ராமசாமி, கமாலுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் மாடசாமி வரவேற்று பேசினார். செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் அல்போன்ஸ் லிகோரி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பு மாநிலக்குழு உறுப்பினர் எட்டப்பன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதி பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை காசில்லா சிகிச்சை திட்டமாக அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.


Next Story