பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல், பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காஜா மைதீன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராம.அய்யாக்கண்ணு, மாவட்ட கவுரவ தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை உடனே வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர் ஞானராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயலாளர் காஜாமைதீன், பழனி வட்ட தலைவர் ராஜா சண்முகம், செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு, அமைப்பு செயலாளர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.


Next Story