நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மதுரை


சாலைப்பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே மிக விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அழகர்கோவில் சாலையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் தபால் அனுப்பும் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர்கள் பால்ராஜ், சந்திரசேகர், மணிமாறன், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப்பொருளாளர் தமிழ் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சோலையப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள். முடிவில், மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார். மாநில பொதுச்செயலாளர் அன்சராஜ் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story