கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டையில் அரசு கலைக் கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கவுரவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையில் பணி அனுபவம் மற்றும் நேர்காணல் நடைமுறையை பின்பற்ற வேண்டும், அரசு சட்டக்கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு இணையாக மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை அரசு கல்லூரி முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் பாக்கியம் முன்னிலை வகித்தார். இதில், பொருளாளர் விஜி, மதுரை மண்டல செயலாளர் சுபாஸ்ரீ மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஏராளமானோர் கருப்பு பட்டை அணிந்து கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.